132 ஆண்டுகளுக்கு பிறகு இடைவெளி விட்டு வெற்றி பெற்ற 2-வது நபர் ட்ரம்ப்

15 0

 டொனால்டு ட்ரம்ப் கடந்த 2017 முதல் 2021 வரை அதிபராக இருந்தார். ஆனால் 2020-ல்நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேர்தலில்ஆட்சி அமைக்க தேவையான 270 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்றதால் ட்ரம்ப் 2-வது முறையாக அதிபராவது உறுதியாகி விட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து வெற்றி பெறாமல் இடைவெளி விட்டு வெற்றி பெற்ற 2-வது நபர் என்ற பெருமை ட்ரம்புக்கு கிடைத்துள்ளது.இதற்கு முன்பு குரோவர் கிளீவ்லேண்ட் இந்த சாதனையை படைத்திருந்தார். இவர் 22, 24-வது அதிபராக பதவிவகித்தார். இவரது சாதனையை132 ஆண்டுகளுக்கு பிறகு ட்ரம்ப்முறியடித்துள்ளார். 45-வது அதிபராக (2017 – 2021) பதவி வகித்த இவர், 47-வது அதிபராக பதவி யேற்க உள்ளார்.