தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தான விடயம் என ஜேவிபியின் ஸ்தாபக தலைவர் ரோகணவிஜயவீரவின் மகன் உவிந்து விஜயவீர எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது அரசியல் ரீதியில் பேரழிவாக அமையும் என இரண்டாவது தலைமுறை கட்சியின் பொதுச்செயலாளரான உவிந்து விஜயவீர தெரிவித்துள்ளார்.
ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு கிடைத்தால் உருவாகக்கூடிய விளைவுகள் குறித்து வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1977 பொதுத்தேர்தலில் மிகப்பெரும் பெரும்பான்மையை பெற்ற பின்னர் ஜேஆர் ஜெயவர்த்தன முன்னெடுத்த அரசியல் தந்திரோபாயங்கள் குறித்து நினைவுபடுத்தியுள்ள ரோஹன விஜயவீரவின் மகன்,அவ்வாறானதொரு நிலைமையை நாடு தாங்காது என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதற்காக ஊழல் அரசியல்வாதிகளை தோற்கடிக்கவேண்டும் என்ற தேசிய மக்கள் சக்தியின் பிரகடனம் பிழையானது என நான் கருதவில்லை ஆனால் புதிய பழைய கட்சிகளில்இருந்து புதியவர்கள் பலர் போட்டியிடும் இந்த தருணத்தில் வாக்காளர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டும் என அழுத்தம் கொடுப்பது சரியாதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாகதேர்தலில் போட்டியிடும் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவோம் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக்கு வாக்காளர்கள் பலியாகவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.