ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வலுவான தலைமையின் கீழ், இலங்கை அரசாங்கமும் மக்களும் நிச்சயமாக தன்னம்பிக்கையுடன், பல்வேறு இடர்களையும் சவால்களையும் கடந்து, சிரமங்களிலிருந்து விரைவாக மீண்டு, பொருளாதாரத்தை புத்துயிர் பெற முடியும் என கீ சென்ஹொங் தெரிவித்தார். “சீன தூதுவர் புலமைப்பரிசில்” பரிசளிப்பு விழா கெப்பிட்டிபொல பாடசாலையில் நடைபெற்றது. அங்கு விஜயம் செய்த சீனத்தூதுவர் கீ சென்ஹொங் முதலில், சீன மற்றும் சிங்கள மொழிகளில் பொறிக்கப்பட்ட ‘காலனித்துவம் மற்றும் படையெடுப்பிற்கு எதிராகவும் சுதந்திரத்திற்காகவும் தைரியமாக போராடிய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கு உரையாற்றிய தூதுவர் குறிப்பிடுகையில், மாணவர்களின் அன்பான வரவேற்பு சீன மற்றும் இலங்கை மக்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. சீனாவும் இலங்கையும் வெகுதொலைவில் உள்ளன, ஆனால் எங்கள் நட்பு பரிமாற்றம் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக்கொண்டிருக்கிறத சர்வதேச நிலைமைகள் எவ்வாறு மாறினாலும், சீனா எப்போதும் இலங்கை மக்களுடன் நிற்கும். அத்துடன் இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நல்ல பங்காளியாகவும் உள்ளது. இலங்கை தற்போது புதிய சகாப்தத்தில் பிரவேசித்துள்ளதுடன், சீன அரசாங்கமும் மக்களும் தங்களால் இயன்ற வகையில் இலங்கைக்கு பல்வேறு வகையான உதவிகளை தொடர்ந்தும் வழங்குவார்கள். ஜனாதிபதி திஸாநாயக்கவின் வலுவான தலைமையின் கீழ், வீர உணர்வை முன்னெடுத்துச் செல்வதன் மூலம், இலங்கை அரசாங்கமும் மக்களும் நிச்சயமாக தன்னம்பிக்கையுடன், பல்வேறு இடர்களையும் சவால்களையும் கடந்து, சிரமங்களிலிருந்து விரைவாக மீண்டு, பொருளாதாரத்தை புத்துயிர் பெற முடியும் என்றார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி.அபோன்ஸ் குறிப்பிடுகையில், இலங்கை செழிப்பு மற்றும் வலிமை அடைவதற்கு சீன அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் உதவிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பாடசாலையின் பழைய மாணவர் என்ற வகையில், சீனத் தூதரகம் வழங்கிய நன்கொடைக்கு மனமார்ந்த நன்றிகள். இச்செயற்பாடு இலங்கை – சீன நட்புறவை தொடர்ந்து ஆழப்படுத்துவதற்கு பங்களிக்கின்றது என்றார்.

7 0

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கம்பஹா, களுவாரிப்புவ பிரதேசத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (5) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் கந்தானை, நீர்கொழும்பு மற்றும் வென்னப்புவ ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி , 2 தங்க மோதிரங்கள் , வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.