நான் மேற்கொண்ட பொதுச் சேவைகளில் சிங்கள, முஸ்லிம், தமிழ் என நான் பாகுபாடு காட்டியதில்லை. நான் பாத்ததும்பறைத் தொகுதிக்கு செய்த சேவைகளில் ஒரு சிறு பகுதியைக் கூடா செய்யாவர்கள்தான் இன்று பாத்ததும்பறைத் தொகுதிக்கு வந்து வெட்கம் இன்றி வாக்குக் கேட்கின்றனர் என கண்டி மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் முன்னாள் பாத்ததும்பறைத் தொகுதி ஐ.தே.க. அமைப்பாளர் நதீக நாணயக்கார தெரிவித்தார்.
கண்டி உடதலவின்ன என்ற இடத்தில் தமது தேர்தல் பிரசாரக் காரியாலயம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கயைில்,
நான் பொது மக்கள் பிரச்சினைகளை நேரடியாகப் பேசுவதன் காரணமாக சில அரசியல் கட்சிகள் என்னைப் புறக்கணித்தன. எனவே நான் சிறந்த ஒரு குழுவை அமைத்து சுயேட்சையாகப் போட்டியிடுகிறேன்.
அதே நேரம், இன்று தேங்காய் ஒன்றைக் கொள்வனவு செய்துகொள்ள முடியாது பொது மக்கள் அவதிப்படுகி்னறனர். பாதித் தேங்காயை பணம் கொடுத்து வாங்கும் நிலையை இதற்கு முன் நாம் கேள்விப்பட்டதில்லை.
இதற்குக் காரணமான தெங்கு அபிவிருத்தி சபை மற்றும் விவசாய திணைக்களம் என்பவற்றின் ஊழல் புரியும் அதிகாரிகள் சிலர் இணைந்து மேற்கொண்டு வரும் தெங்கு மாப்பியாவை ஒழிக்க வேண்டும்.
கண்டி மாவட்டத்தில் குரங்குத் தொல்லை காரணமாக பிரதேச விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். குரங்குத் தொல்லை காரணமாக விவசாய உற்பத்திகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
50 சதவீத்தற்கும் மேற்பட்ட உற்பத்திகள் அழிக்கப்படுகின்றன. எனவே இதற்கு விவசாய திணைக்கள அதிகாரிகளால் ஏன் முறையான ஒரு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது? எனக் கேட்க விரும்புகிறேன்.
நான் சுமார் 30வருடகாலமாக பாத்ததும்பறைத் தொகுதியில் வசித்து வருவதுடன் அரசியல் மற்றும் பொது சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன்.
200 இலட்சும் ரூபாய்க்கு மேல் எனது சொந்தப்பணத்தில் பாத்தும்பறைத் தொகுதி மக்களுக்கு சேவை புரிந்துள்ளேன். எனது பொதுச் சேவையில் சிங்கள, முஸ்லிம், தமிழ் என நான் பாகுபாடு பார்க்கவில்லை.
நான் பாத்தும்பறைத் தொகுதிக்கு செய்த சேவைகளில் ஒரு சிறிய பகுதியைக் கூடா செய்யாவர்கள்தான் இன்று பாத்ததும்பறைத் தொகுதிக்கு வெட்கம் இன்றி வருகை தந்து வாக்குக் கேட்கின்றனர்.
நான் பொதுப் பிரச்சினைகளில் நேரடியாகப் பேசுவதன் காரணமாக சில அரசியல் தலைவர்கள் தமது கட்சியூடாக என்னை ஓரங்கட்ட முயற்சித்தனர். இதன் காரணமாக நான் சுயேட்சைக் குழு ஒன்றை அமைத்து போட்டியிடுகிறேன்.
இலக்கம் 11 ஐ கொண்ட எனது சுயேட்சைக்குழுவின் சின்னம் உதைப்பந்தாகும். என்னால் சேவை நடக்கும் எனக்கருதினால் என்னையும் தெரிவு செய்ய எனது உதைப்பந்து சின்னத்திற்கு வாக்களிக்கும் படி வேண்டுகிறேன் என்றார்.