ரிட் மனுவை வாபஸ் பெற்றார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

13 0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

கொழும்பில் உள்ள நட்சத்திர  ஹோட்டல் வளாகத்தில் பதிவு செய்யப்படாத BMW கார் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் இந்த மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று செவ்வாய்க்கிழமை (05)  மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மொஹமட் லபார் தாஹிர் மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  சார்பில் மன்றில் முன்னிலையான சட்ட ஆலோசகர்கள், தமது கட்சிக்காரருக்கு ஏற்கனவே நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளதால், வழக்கை தொடர விரும்பவில்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

எனவே, சம்பந்தப்பட்ட மனுவை வாபஸ் பெற நீதிமன்றத்தின் அனுமதியை கோரினர்.

அதன்படி, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, மனுவை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.