கொழும்பு, ஜாவத்தை சந்தியில் உள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.