உத்தராகண்ட் பேருந்துவிபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு

23 0
image

துடெல்லி: உத்தராகண்டின் அல்மோரா மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

பவுரி என்ற இடத்தில் இருந்து ராம்நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து அல்மோரா மாவட்டத்தின் மார்ச்சுலா என்ற இடத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்து இன்று (நவ.4) காலை நடந்துள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்துள்ளனர். விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர்.

கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் சந்தீப்இ இன்னும் ஒருவர் விரைவில் வந்து சேருவார் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

ரூ.2 லட்சம் நிவாரணம்: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்இ “உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவில் நடந்த சாலை விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல். மேலும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ் உள்ளாட்சி நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும் காயமடைந்தர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது