ஜனாதிபதி அநுரகுமார முன்னெடுத்துச்செல்லும் வேலைத்திட்டம் என்ன ? – நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க

5 0

 அதிகாரத்துக்கு வந்து ஒரு மாத காலம் முடிவடைந்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வேலைத்திட்டம் வளமான நாடு அழகான வாழ்க்கையா அல்லது ரணில் விக்ரமசிங்கவின் இயலும் சிறிலங்காவா என கேட்கிறோம் என புதிய ஜனநாயக முன்னிணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில்   இடம்பெற்ற செய்தியாளர் சந்த்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையில் அவர்களின் வேலைத்திட்டத்தில் எந்த மாற்றத்தையும் காணக்கூடியதாக இல்லை.

அதனால் தேசிய மக்கள் சக்தியின் வளமான நாடு அழகான வாழ்க்கை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள  வேலைத்திட்டத்தில் எதுவும் இதுவரை செயற்படுத்தப்பட வில்லை. அவ்வாறானால்.

அநுரகுமார திஸாநாயக்க கொண்டு செல்லுலம் வேலைத்திட்டம் என்ன?  வளமான நாடு அழகான வாழ்க்கை வேலைத்திட்டமா அல்லது ரணில் விக்ரமசிங்கவின் இயலும் சிறிலாங் வேலைத்திட்டமா?

ஆனால் அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை அவ்வாறே கொண்டு செல்வதையே காணக்கூடியதாக இருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த அரசாங்கம் செய்துகொண்டிருந்த ஒப்பந்தங்களில் திருத்தம் மேற்கொள்வதாக தெரிவித்தார்கள்.

ஆனால் நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அவ்வாறான எந்த திருத்தத்தையும் மேற்கொள்ள அரசாங்கம் கலந்துரையாடவில்லை. கடந்த அரசாங்கம் மேற்கொண்ட இணக்கப்பாடுகளை அவ்வாறே முன்னெடுச் செல்வதாகவே தெரிகிறது.

மேலும் டிசம்பரில் இடம்பெற இருக்கும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? கடந்த காலங்களில் சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றால் அது தொடர்பில் அரச தலைலர் அல்லது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நாட்டுக்கு தெளிவுபடுத்துவார்.

ஆனால் தற்போது அது எதுவும் இடம்பெறுவதில்லை. சர்வதேச மாநாடுகளிலும் நாட்டுத் தலைவர் கலந்துகொள்வதில்லை. இதுவரை இடம்பெற்ற பிட்ஸ் மற்றும் பொதுநலவாய ஆகிய இரண்டு மாநாடுகளிலும் அரச தலைரவர் கலந்துகொள்ளவில்லை. இதற்கான காரணம் என்ன?. என்பதை நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இது ஜனநாயக நாடு. மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த காரியாலயத்தை நிர்வகிப்பதுபோல் நாட்டை நிர்வகிக்க முடியாது.

அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் 42 வீத வாக்குகளைப்பெற்ற அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு 100 வீத பாராளுமன்ற அதிகாரத்தை கேட்டுவருகிறார்.

நாட்டுக்கு எதிர்க்கட்சி தேவையில்லையா? ஏகாதிபத்திய ஆட்சியை கொண்டு செல்வவதற்கா இவர்கள் முயற்சிக்கிறார்கள்?.  அதனால் இந்த தேர்தலில் மக்கள் புதிய ஜனநாயக முன்னணிக்கு அதிகாரத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்.

பாராளுமன்றத்தில் எமக்கு அதிகரத்தை வழங்கினால் நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் இருக்கிறது என்றார்.