அரச, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தேர்தல் விடுமுறைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

13 0

இம்மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தேர்தல் விடுமுறைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது,

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்லும் தூரத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த விடுமுறைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் அல்லது அதற்கு குறைந்த தூரத்தில் இருப்பவர்களுக்கு அரைநாள் விடுமுறையும், 40 கிலோ மீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் விடுமுறையும், 100 கிலோ மீட்டரிலிருந்து 150 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒன்றரை நாள் விடுமுறையும், 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருப்பவர்களுக்கு இரு நாட்கள் விடுமுறைகளும் வழங்கப்படும்.

இதன்போது, அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் தனிப்பட்ட விடுமுறை விதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.