தனமல்வில – வெல்லவாய வீதியில் கிவுல்ஆர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று சனிக்கிழமை (02) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணித்த லொறி ஒன்றின் சக்கரமொன்றில் காற்று வெளியேறியதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது லொறியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.