2024 பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (03) கருதப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், 2,034 நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வருட பாராளுமன்ற தேர்தலில் 17,430,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.