மக்களை ஏமாற்றும் அரசியலை தொடர்வதற்கு துணிச்சலான எதிர்க்கட்சியாக தமது குழு ஒருபோதும் அனுமதிக்காது என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
ஜா-எல, கொட்டுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“இன்று நாம் யாரையும் குறை கூற முடியாது. நாங்கள் உருவாக்கி இருப்பது இந்த நாட்டை நேசிக்கும், தாய்நாட்டை நேசிக்கும் மக்களின் முகாம். இதில் ஊழல்வாதிகள் யாரும் இல்லை. இந்த மோசடி, ஊழல் அரசியலுக்கு முடிவு கட்டும் அரசியலை செய்து காட்டுவோம். திருடர்களைப் பிடிப்பதாக கூறி இந்நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த அநுர குமாரவுக்கு நாங்கள் சொல்ல நினைப்பது, துணிச்சலான எதிர்கட்சியொன்று வந்துக்கொண்டு இருக்கிறது. இது தைரியமான துணிச்சலான எதிர்க்கட்சி.ஏமாற்றி இந்த அரசியலை செய்ய அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டில் தொழிற்சங்கங்களால் பெரும் அழிவு ஏற்பட்டுவதாக தோழர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவிக்கிறார். எந்நாளும் போராட்டமாம், குழந்தைகளை படிக்க விடுவதில்லையாம், நோயாளர்களுக்கு மருந்து எடுக்க விடுவதில்லையாம். எனவே இப்போது நாங்கள் எங்கள் தொழிற்சங்க இயக்கத்தை கலைக்கிறோம் என்று கூறுகிறார். இந்த செயல் எப்படி? இப்போது நாங்கள்தான் அவற்றை செய்தோமா? ஒரு வருடத்தில் 80 பேரை காலிமுகத்திடலுக்கு அழைத்து வந்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசி எவ்வளவோ பொருளாதாரச் சேதம் விளைவித்தார்கள்? இந்த நாட்டை அழிக்க நினைத்தால், அதை எதிர்க்க ஒரு துணிச்சலான எதிர்க்கட்சியாக எமது எதிர்ப்பை வௌிப்படுத்துவோம்.”