அனைத்து பன்றிப் பண்ணை உரிமையாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு

13 0

நாட்டில் உள்ள அனைத்து பன்றிப் பண்ணைகளின் உரிமையாளர்களும் அருகில் உள்ள கால்நடை அலுவலகத்துக்குச் சென்று தங்களது பன்றிப் பண்ணைகள் தொடர்பில் தகவல்களை வழங்கி பதிவு செய்யுமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் நாட்டின் பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகளும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பன்றிக் காய்ச்சல் பாதிப்பு மேல், ஊவா, வட மற்றும் வடமேல் மாகாணங்களில் ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் கே.கே. சரத் தெரிவித்துள்ளார்.