ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது.இதனால் இஸ்ரேல் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள இஸ்ரேலியர்கள் அவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதுதான் எங்களது போரின் திட்டம் என இஸ்ரேல் கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்தது. அத்துடன் லெபனான் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. அத்துடன் குறைந்த அளவு தரைவழி தாக்குதலையும் நடத்தியுள்ளது.
தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்தவரையும் தாக்குதல் நடத்தி கொன்றது.
இந்த நிலையில் கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரை குறிவைத்துள்ளது. இதனால் அந்த நகரில் வசித்து வரும் மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலி செய்ய சொல்லும் இடத்தில் யுனெஸ்கோ பாரம்பரிய பழங்காலத்து ரோமன் டெம்பிள் காம்ப்ளக்ஸ் உள்ளது.லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர், கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந்தேதிக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் 2,790 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
12,700 பேர் காயம் அடைந்துள்ளனர்.பால்பெக் நகர் பெகா பள்ளத்தாக்கிற்கு செல்லும் முக்கிய வழியாகும். இந்த பகுதிகளை ஏற்கனவே இஸ்ரேல் சுற்றி வளைத்துள்ளது.ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், முதன்முறையாக வெளியேறும் எச்சரிக்கை விடுத்துள்ளது .