காசா மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் வடக்குப் பகுதி மீது லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் தங்களுடைய வடக்குப் பகுதிக்கு அச்சுறுத்தல் என நினைத்த இஸ்ரேல், ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.புலனாய்வுத்துறையின் ரகசிய தகவல்படி ஹிஸ்புல்லா நிலைகளை துல்லியமாக தாக்கி அழித்து வருகிறது.
அந்த வகையில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் ஹஸ்ரல்லாவை வான்தாக்குதல் மூலம் கொலை செய்தது. மேலும் சில முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்கி கொன்றது.தற்போது பால்பெக் என்ற கிராமத்தில் உள்ள மக்களை முழுமையாக வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே ஹிஸ்புல்லா- இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நவம்பர் 5-ந்தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்த நிலையில், அவருக்குப் பதிலாக நைம் காசிம் ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்
.இவர் இஸ்ரேல் உடனான மோதல் குறித்து கூறுகையில் \”லெபனானில் இஸ்ரேலின் பல மாதங்களாக வான் மற்றும் தரைவழி தாக்குதலை ஹிஸ்புல்லாவால் தடுக்க முடியும். இருந்தபோதிலும், இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நிறுத்த விரும்பினால், நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் எனச் செல்வோம். அதவும், எங்களுக்கு சாதகமாக மற்றும் வசதியான நிபந்தனைகள் கீழ்த்தான் ஒப்புக்கொள்வோம். ஹிஸ்புல்லா இதுவரை நம்பத்தகுந்த வகையிலான பரிந்துரையை இன்னும் பெறவில்லை\” என்றார்.
இஸ்ரேல் எரிசக்தி மந்திரி “இஸ்ரேல் பாதுகாப்பு கேபினேட்டில் பாதுகாப்பான போர் நிறுத்தத்திற்கு என்ன வகையிலான நிபந்தனைகள் வழங்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது ” என்றார். “ஆலோசனை நடைபெற்றது. இதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகலாம் ” என இஸ்ரேல் முன்னாள் உளவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் எல்லையில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள லிட்டானி ஆற்றின் வடக்குப் பகுதியில் இருந்து ஹிஸ்புல்லா வெளியேறுவது, எல்லையில் லெபனான் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது குறித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.