தீபாவளி தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் சௌபாக்கியா உற்பத்தி கிராம சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி இன்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா உற்பத்தி கிராம வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் விற்பனை கண்காட்சி பசுமை பூங்கா வளாகத்தில் இன்று நடைபெறுகிறது.
கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இந்த விற்பனைக் கண்காட்சியை திறந்து வைத்தார்.
மேலும், சிறப்பு விருத்தினர்களாக இளைப்பாறிய திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன், விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சோதிவிஜயதாசன், மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் ச.சசீபன், கண்டாவளை பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி Dr.S.கஜஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் வருகை தந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.