முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றில் பிணை பெற்று நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர், நீதிமன்றில் உண்மை வௌியாக வேண்டும் என்றார்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சமீபத்தில் பிலபல ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக அவர் ஒக்டோபர் 23ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதற்கமைய, தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான 5 சரீரப் பிணைகளுடன் அவரை பிணையில் விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.