திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே தேர்தலில் இணைந்து போட்டியிடுகிறோம் என இலங்கை தமிழ் அரசு கட்சி முதன்மை வேட்பாளர் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது வடக்கு, கிழக்கில் திருகோணமலையில் மாத்திரமே தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க இலங்கை தமிழ் அரசு கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றது என்றார்.