வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நன்கொடையாக 3 மில்லியன் ரூபாவை வழங்கியது போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனம்

16 0

 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினால் 3 மில்லியன் ரூபா நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சியோங் ஹொங்பெங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று  திங்கட்கிழமை (28)  ஜனாதிபதி  செயலகத்தில்  நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், எதிர்கால பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கான புதிய திட்டங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதுமாத்திரமன்றி இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 3 மில்லியன் ரூபா நன்கொடை போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளரால் ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உதவி முகாமைத்துவப்பணிப்பாளர் சியன் நன்னும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.