தேசபந்து தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதியாக ரணில் விக்கிரமசிங்க

29 0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (29) அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்குட்படுத்தப்பட்து.

இதன்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிடுவதற்கு அனுமதி வழங்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

சட்டத்தரணியின் கோரிக்கையை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் இந்த வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.