மொனராகலையில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டவர் கைது !

23 0

மொனராகலை, கொட்டியாகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சில்வாவல பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக எத்திமலை பொலிஸார் தெரிவித்தனர்.

எத்திமலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வீலஓயா பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.