ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொகுசு வாகனத்தின் இரு சாரதிகள் கைது

25 0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சொகுசு வாகனத்தின் சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவிக்கையில்,

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வாதுவை மற்றும் பொல்கஹவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் இருவரும் கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து சொகுசு வாகனம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த 23 ஆம் திகதி அன்று குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.