மனைவியை தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்திய கணவன் கைது

24 0

தனது மனைவியை தாக்கி காயப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படும் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மின்னேரியா, கிரித்தலையாய பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பூசாரியாக பணிபுரிவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.