வட்ஸ்அப் உட்பட பல்வேறு சமூக ஊடகங்களில் பகிரப்படும் குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கை!

22 0

வட்ஸ்அப் உட்பட பல்வேறு சமூக ஊடகங்களில் பகிரப்படும் குறுஞ்செய்திகள் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வட்ஸ்அப் உட்பட பல்வேறு சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் ஊடாக பிறரின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.

எனவே, வங்கிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தித் தனிப்பட்ட தகவல்களைக் கோரும் குறுஞ்செய்திகள் மற்றும் (OTP) இலக்கங்களை வழங்குமாறு பகிரப்படும் குறுஞ்செய்திகள் தொடர்பில் பொதுமக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மேலும் தெரிவித்துள்ளது.