உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை உடன் நடத்த கோரி, பெப்ரல் அமைப்பு உயர் நீதிமன்றில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
எல்லை நிர்ணயங்கள் நிறைவுப் பெற்றுள்ள பிரதேசங்களில் தேர்தலை உடன் நடத்துமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப்படுவதினால், மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தேர்தல்களை உடன் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவில், பிரதிவாதிகளாக உள்ளுராட்;சி மன்ற சபைச்சர், தேர்தல்கள் ஆணையகம் உள்ளிட்ட 11 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.