பெலியத்த – கண்டி அதிவேக ரயிலில் ரவைக்கூடு மீட்பு

18 0

பெலியத்தவில் இருந்து  கண்டி நோக்கி  பயணிக்க இருந்த அதிவேக ரயிலில்  ரவைக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மருதானையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட ஆரம்பித்த ரயில் பெலியத்த ரயில்  நிலையத்தில் தனது பயணத்தை நிறைவ செய்தது.

இந்நிலையில், குறித்த ரயில் பெலியத்தவில் இருந்து மீண்டும் கண்டிக்கு புறப்படத் jயாராக இருந்தது. புறப்படுவதற்கு முன்னர் ரயில் அதிகாரிகளின் வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது ரயிலில் இருக்கை ஒன்றின் கீழே கறுப்பு நிற பை ஒன்றில் ஒரு பத்திரிகை மற்றும் ரவைக்கூடு மீட்கப்பட்டுள்ளது.

உடனடியாக சம்பவம் குறித்து பெலியத்த ரயில் நிலைய அதிபருக்கு அறிவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ரயிலின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்போது மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால், பெலியத்தவில் இருந்து கண்டிக்கு புறப்படவிருந்த ரயில் தாமதமடைந்துள்ளது.