பிரித்தானியாவிற்கான இலங்கையின்உயர்ஸ்தானிகர் ரோகிதபோகொல்லாகமவிற்குஎதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்தெரிவித்துள்ளார்.
அவரது செலவீனங்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவித்துள்ள விஜித ஹேரத் உயர்ஸ்தானிகர் பயன்படுத்தும் கார் அவரின் நிதியிலிருந்தே கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிதி எதுவும் செலவிடப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இராஜாதந்திரிகளாக பணியாற்றுபவர்களை உடனடியாக மீள அழைக்கப்போவதில்லை, அரசியல் ரீதியில் நியமனம் பெற்றவர்கள் எதிர்காலத்தில் மீள அழைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.