சிறைச்சாலை கைதிக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருளைக் கொண்டு சென்றவர் கைது

10 0

புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்குப் போதைப்பொருளைக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபர் கைதி ஒருவரைச் சந்திப்பதற்காக உணவு பொதியுடன் புதிய மெகசின் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த உணவுப் பொதியினுள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.