மலையக ஜனநாயக முன்னணியின் கொள்கை பிரகடணம் வெளியீடு

16 0

இம்முறை நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தாயக்கட்டை சின்னத்தில் போட்டியிடும்  சட்டத்தரணி ஹெரோஷன் குமார் தலைமையிலான சுயேச்சை குழு 11 தனது கொள்கை பிரகடணத்தை நேற்று சனிக்கிழமை  (26) தலவாக்கலையில வெளியிட்டது.   

மலையக ஜனநாயக முன்னணி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அமைப்பே பாராளுமன்றத் தேர்தலில சுயேச்சை குழுவாக களமிறங்கியுள்ளது.

வெகு விரைவில் இது ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு மலையகத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமென  முன்னணியின் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்

தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மலையக ஜனநாயக முன்னணி (சு.குழு 11) தனது கொள்கைப் பிரகடணத்தை அறிமுகப்படுத்தியதோடு தமது குழுவினூடாக களமிறங்கவுள்ள வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இவ்வமைப்பின் கொள்கைப் பிரகடணத்தில் * சலுகை அரசியலிலிருந்து மீண்டு சுயகௌரவமாக வாழக்கூடிய உரிமை அரசியலை முன்னெடுத்தல்..  * மலையக மக்களின அடையாளத்தை உறுதிப்படுத்தல்,  * காணியுரிமை.  * உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெற்றுக்கொடுத்தல்.  வெளிமாவட்டங்களில் பணிபுரியும் மலையகத்தவரின் தொழில பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.  * மலையக விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை முன்னெடுக்க வலியுறுத்துதல . . * சுயதொழிலை மேம்படுத்தல், மலையகமெங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களை உருவாக்குதல்.  *  முறைசார முன்பள்ளி உருவாக்கம் மற்றும் பாடசாலை இடைவிலகலை தடுத்தல். * பெருந்தோட்டங்களில சுகாதார நலத்திட்டங்களை முன்னெடுத்தல். முறையான குடிநீர் வசதி கட்டமைப்பை உருவாக்குதல்  * மலையக மக்களுக்கு ஏற்படும் உடல், உள நல பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்தல .  என பல விடயங்களை உள்ளடக்கிய கொள்கைப பிரகடணம் வெளியிடப்பட்டதோடு இது தொடர்பான விளக்கத்தை ஊடகவியலாளர் சந்திப்பில குழுவின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி ஹெரோஷன் குமார மற்றும பலரும் தெளிவுப்படுத்தினர்.

வெறுமனே பொதுத் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அணி இதுவல்ல என்றும் மக்களோடு மக்களாக, மக்களுக்காக பயணிக்கும் உயரிய நோக்கத்துடன் தொடர்ச்சியாக பயணிக்கும் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர். நுவரெலியா மாவட்டத்தில்  தாயக்கட்டை சின்னத்தில களம் இறங்கியுள்ள இக்குழுவில 5 சட்டத்தரணிகளுடன் கற்றறிவாளர்களே வேட்பாளர்களாக உள்ளமை சிறப்பம்சமாகும்.