வீசா இன்றி சட்ட விரோதமாக கண்டியில் தங்கியிருந்த வெளிநாட்டுத் தம்பதி கைது

22 0

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தான பிரதேசத்தில்  குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி, வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு தம்பதியினர் நேற்று சனிக்கிழமை (26) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் 39, 32 வயதுகளையுடைய ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தம்பதியர் ஆவர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கண்டி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.