நாட்டின் கலாசாரம் மற்றும் மரபுகள் தொடர்பில் உணர்வுபூர்வமாக தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சர்வஜன அதிகார தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
பியகமவில் நடைபெற்ற சர்வஜன அதிகாரத்தின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இந்த வருடம் பொதுத்தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறுகிறது. 15ஆம் திகதி போயா தினம். எனவே எமது கலாசாரத்தை உணர்ந்து செயற்படுமாறு எமது ஜனாதிபதியை நாம் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம். நமது கலாச்சாரத்தை உணர்ந்து, நமது மரபுகளை உணர்ந்து செயல்படுங்கள். அரசியலமைப்புக்கு எதிராக ஏற்கனவே ஒரு நாள் முன்னதாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பௌத்த மத நிகழ்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதை சரி செய்து வாக்களிப்பை இன்னும் ஓரிரு நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதேவேளை, சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் மற்றுமொரு பொதுக்கூட்டம் பெபிலிவெல பிரதேசத்தில் நடைபெற்றது.
“இலங்கையில் முதன்முறையாக சிறுபான்மை வாக்குகளால் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு எதிராக ஏராளமானோர் வௌியே களத்தில் உள்ளனர். எனவே அவர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். எதிர்க்கட்சி என்றால், எதிர்க்கட்சித் தலைவர் என்றால், ஏனைய மக்களின் அரசு, எனவே நாங்கள் அந்த அரசாங்கத்தை வழிநடத்த விரும்புகிறோம்.இந்த நாட்டிற்கு ஒரு அறிவார்ந்த அரசியல், இளைஞர்களால் அங்கீகரிக்கக்கூடிய நாகரீக அரசியல் தேவை என்பதே எங்கள் விருப்பம். இந்த அரசியலுடன் நம் எவருக்கும் வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. நாங்கள் உங்களை வாழ வைக்க விரும்புகிறோம்.” என்றார்