கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல், 2,447 இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்காக வெளியேறியுள்ளனர்.
மேலும் 61 பேருக்கு விமானச் சீட்டுகள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (25) நடத்தப்பட்டதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இஸ்ரேலில் மோதல் சூழ்நிலை நிலவுகின்ற போதிலும், அங்கு பணிபுரியும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.