இலங்கை கடற்படையினருக்கு அமெரிக்கா பயிற்சி

328 0

USS-New-Orleans-train-1இலங்கை கடற்படையினருடன் மனிதநேய உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் தொடர்பில் அமெரிக்க நியு கோர்லின் கப்பல் அதிகாரிகள் சிறந்த பயிற்சிகளை பரிமாறிக்கொண்டனர்.

அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை வந்திருந்த அமெரிக்க கடற்படையின் நியு கோர்லின் கப்பல் அதிகாரிகள், சர்வதேச அபிவிருத்திக்காக அமெரிக்க நிறுவனத்தின் நிபுணர்களுடன் இணைந்து, கொழும்பில் இரண்டு நாள் செயலமர்வுகளை நடத்தினர்.

இதன்போது, மனித நேய உதவி மற்றும் அனர்த்த முகாமைத் தொடர்பான பயிற்சிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமெரிக்க அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையிலும் இலங்கையில் இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்வது தொடர்பிலும் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்ளை அமெரிக்க கடற்படையினர் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை கண்டறிவதற்காக இலங்கையின் கடற்படை வீரர்கள், அமெரிக்க நியு கோர்லின் கப்பலுக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக, அமெரிக்க தூதரக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.