அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹரிஸ் ஆகியோர் தத்தமது பிரசார நடவடிக்கைகளில் இருந்து சிறிய இடைவேளையை எடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸில் நடைபெறவுள்ள பிரசார நடவடிக்கைகளை குறிவைத்து இந்த இடைவேளையை வேட்பாளர்கள் எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப், பிரபல தொகுப்பாளரான (Podcaster) ஜோ ரோகனை சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, கமலா ஹரிஸ், ஹூஸ்டனில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதோடு இதில் பாடகி பேயொன்ஸ் தோன்றவுள்ளார்.
தேர்தலில் ட்ரம்ப் மற்றும் ஹரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருவதோடு ட்ரம்ப்பை விட ஹரிஸ் சிறிய அளவில் மேலோங்கி இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.