பிரித்தானியாவின் முக்கியமான வழக்குகளில் ஒன்றின் குற்றவாளியான அலெக்சாண்டர் மெக்கார்ட்னிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவரையும் அவரின் தந்தையையும் தவறான முடிவெடுக்க தூண்டியமைக்காக அயர்லாந்தின் தெற்கு அர்மாஹைச் சேர்ந்த 24 வயதுடைய அலெக்சாண்டர் மெக்கார்ட்னிக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர், ஸ்நெப்செட் (Snapchat) மற்றும் பிற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி கேட்ஃபிஷிங் (catfishing) என்று அழைக்கப்படும் வேறு நபராக நடித்து பிறரை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது தொடர்பில் இவர் மீது 185 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டை சோதனையிட்ட பொலிஸார், நூற்றுக்கணக்கான சிறுமிகள் மற்றும் பெண்களின் அத்துமீறிய புகைப்படங்களை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், ஏறக்குறைய 3,500 பேர் வரை அலெக்சாண்டர் மெக்கார்ட்னியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.