மலேசியாவில் உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு : அந்தமான் சுற்றுலாத்துறைக்கு அழைப்பு

18 0

மலேசியாவில் உள்ள பினாங்கில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 11ஆவது ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

அந்தமான் தமிழ் சங்கம், அந்தமான் சேம்பர் ஒப் கமர்ஸ் பல்வேறு தமிழ் அமைப்புகளை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பினர் நேரில் சென்று இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கான  அழைப்பினை விடுத்து வருகின்றனர்.

இதில் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சுற்றுலாத்துறையை அழைக்கும் விதமாக இன்று (25) அதன் தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளரை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் மற்றும் அந்தமான் நிக்கோபார் தலைவர் P.B. முருகன் ஆகியோர் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

அதில் ஏர் ஏசியா விமான நிறுவனம் நவம்பர் 16ஆம் திகதி முதல் அந்தமானில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தை இயக்கவுள்ளது.

அதன் மூலம் அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள மக்கள் மலேசியா செல்லவும் மலேசியாவில் உள்ள மக்கள் அந்தமான் தீவில் விடுமுறை நாட்களை கழிக்கவும் பயண ஏற்பாட்டாளர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்தமானில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் பயணிக்கவுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பயண ஏற்பாடு மற்றும் உதவிகளை செய்ய அந்தமானில் உள்ள உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் PB முருகன் பொறுப்பேற்றுள்ளதாக உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.