கொஹுவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெதிமால பிரதேசத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று (25) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடவளவை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் என பொலிஸார் தெரிவித்தனர்
வெளிநாட்டில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த நபரொருவரின் தலைமையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொஹுவல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.