சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தை ஒட்டி மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை (24) பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன பல இடங்களில் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வேககமாக டெங்கு நோய் பரவி வருவதனால் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இப்பாரிய வேலை திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்துக்கு உட்பட்ட இருதயபுரம் உட்பட பல்வேறு இடங்களில் 10 பிரிவுகளாக பொதுச் சுகாதார பரிசோதர்கள் பிரிக்கப்பட்டு பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இப்பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ உதயகுமார் தலைமையில் இடம் பெற்ற இந்த நடவடிக்கையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு நிபுணர் டாக்டர் கார்த்திகா உட்பட வைத்திய அதிகாரிகள் பொதுச்சுகாதார பரிசோதவர்கள் சுகாதாரத் துறை சார்ந்தோர், பொலிசார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பருவமழை ஆரம்பித்திருப்பதால் மாவட்டத்தில் மேலும் பெருமளவில் டெங்கு வரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் மேலும் தெரிவித்தார்.