லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹசன் நஸ்ரல்லா தங்கியிருந்த பதுங்குகுழியில் 500 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.4,200 கோடி பணம், தங்கம் உள்ளிட்டவை இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல்ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹக்காரி கூறியதாவது: ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்புக்கு நிதி உதவி அளித்து வரும் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குறிவைத்து தாக்குதல்களை மேற் கொண்டு வருகிறது.அந்த வகையில், ஹிஸ்புல்லாவுடன் நெருங்கிய தொடர்புடையை நிதி உதவியளிக்கும் அல்-குவார்ட் அல்-ஹாசன் (ஏகியூஏஎச்) அமைப்புக்குச் செந்தமான பல இடங்களை இஸ்ரேலிய விமானப் படை தாக்கி அழித்து வருகிறது.
தலைநகர் பெய்ரூட்டில் மையத்தில் அமைந்துள்ள அல்-சஹேல் மருத்துவமனையின் கீழே பதுங்குகுழி அமைக்கப்பட்டுள்ளது. இது, ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா தங்கியிருந்த இடமாகும். இங்கு, 500 மில்லியன்டாலர் மதிப்பிலான தங்கம்மற்றும் ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பணத்தை கொண்டு லெபனானை மீண்டும் மறுகட்டமைப்பு செய்து விடலாம். அந்த அளவுக்கு அவர்களிடம் பணம் உள்ளது. இவ்வாறு டேனியல் ஹக்காரி தெரிவித்தார்.
ஏகியூஏஎச் அமைப்புதொண்டு நிறுவனமாக பதிவுசெய்திருந்தாலும் அந்தஅமைப்பு ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு உதவி வருவதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.