தமது வேலைத்தளங்களுக்கு பெண்கள் அதிகமான வருவதை உறுதி செய்யும் பொருட்டு நாடளாவிய ரீதியில், சிறுவர்களுக்கான பகல் கண்காணிப்பு நிலையங்களை அமைக்க இணங்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும், பிரதமமந்திரி அலுவலகமும் இதற்கான தேசிய வழிகாட்டல் ஒன்றை வரைந்துள்ளன.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் தரத்தை உறுதிப்படுத்தல், பாதுகாப்பை மேம்படுத்தல், சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்பை வழங்குவோரின் தேவைகளை மேம்படுத்தல் என்பனவற்றிட்கு முன்னிலை வழங்கப்படவுள்ளது.
இதனை தவிர, சிறுவர்களின் அபிவிருத்தி தனிப்பட்ட விருத்தி என்பவையும் உறுதிச் செய்யப்படவுள்ளன.
இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் தேசிய, மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, சிறுவர் பகல் கண்காணிப்பு நிலையங்களுக்கு துறை சார் நிபுணத்துவம் கொண்டவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் அவற்றை கண்காணிப்பதற்காக ஆணையாளர்களும் நியமிக்கப்படவுள்ளார்கள் எனவும் பிரதமமந்திரி காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.