மாத்தறை, ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கெஸ்பேவ பிரதேசத்தில் வைத்து நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஸ்பேவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கார் , வேன் மற்றும் துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை, நாவிமன, ருவன்வெல்ல பிரதேசத்திற்குக் கடந்த 15ஆம் திகதி காரில் வந்த இனங்காணாத நபர்கள் சிலர் முச்சக்கரவண்டியில் இருந்த நபர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் காலை செய்துவிட்டு அங்கிருந்த தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.