காணாமல்போன அரச வாகனங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை

18 0

காணாமல்போன அரச வாகனங்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்தே இந்த வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரச வாகனங்கள் காணாமல்போனமை தொடர்பில் ஜனாதிபதி செயலாளரினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின்  அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 அரச வாகனங்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் விரிவான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக தகவல்களை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளனர்.