இலங்கையில் வெளிநாட்டவர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் செல்லும் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் ஆபத்து காணப்படுவதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலியா இலங்கையின் பிராந்தியங்கள் மற்றும் கடலோர பகுதி நகரங்களில் வெளிநாட்டவர்கள் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் விஜயம் மேற்கொள்ளும் பகுதிகளில் தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரித்துள்ளது.
மத்தியகிழக்கில் தொடரும் மோதல்கள் உலகின் ஏனைய பகுதிகளில் இஸ்ரேலின் நலன்களிற்கு எதிராக தாக்குதல்கள் இடம்பெறும் ஆபத்தை அதிகரித்துள்ளது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.