இந்தியாவிலும் இலங்கையிலும் காலநிலை மாற்ற உள்வாங்கலை வலுப்படுத்தும் பிராந்திய செயல்திட்டம் அறிமுகம்

12 0

இந்தியாவிலும், இலங்கையிலும் காலநிலை மாற்ற உள்வாங்கலை வலுப்படுத்தும் பிராந்திய செயல்திட்டத்தை (WFP) அறிமுகம் செய்துள்ளது.

கொழும்பு – இந்தியா மற்றும் இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சுக்களுடன் இணைந்து ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டமானது (WFP) நெகிழ்வுத்தன்மைக்கு உள்வாங்கல் (ADAPT4R)  நிகழ்ச்சியை நேற்று திங்கட்கிழமை (21) அறிமுகம் செய்தது.

காலநிலையால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் விவசாயச் சமூகங்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்குடையதாக இந்த ஐந்தாண்டு கால திட்டம் உள்ளது.

உள்வாங்கல் நிதியத்தின் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பங்களிப்பின் மூலம் செயற்படுத்தபடும் இத்திட்டமானது, இரு நாடுகளிலும் விவசாயம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களில் பாதகமான வானிலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் விவசாயிகள் உள்ள மாவட்டங்களில் மீது கவனம் செலுத்துகிறது.

காலநிலை சேவைகள் மூலம் தகவல்களை வழங்குவதன் ஊடாகவும், ஏற்கனவே உள்ள அமைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும், ADAPT4R ஆனது விவசாயிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, அவர்களின் விவசாயம் மற்றும் வாழ்வாதாரங்களை காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தாங்கக்கூடியதாக மாற்றும்.

இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனாந்திரங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சு (MoEFCC) மற்றும் இலங்கை அரசின் சுற்றுச்சூழல், வனவிலங்கு, வன வளங்கள், நீர் வழங்கல், தோட்டம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு என்பன றுகுP யுடன் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்.

“உணவுப் பாதுகாப்பிற்கு அதிகரித்து வரும் காலநிலை சவால்களுக்கு பதிலளிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலகளாவிய காலநிலை ஆபத்துக் குறியீட்டின் (2021) படி, காலநிலை நிகழ்வுகளால் பாதிக்கப்படக்கூடிய முதல் 10 நாடுகளில் இந்தியா உள்ளது. WFP மற்றும் MoEFCC இடையேயான இந்தப் புதிய பங்காளித்துவமானது, வறண்ட நிலப் பகுதிகளில் உள்ள சிறுதொழில் செய்பவர்களின் தகவமைப்புத் திறனை வளர்ப்பதன் மூலம் இந்தியாவில் உள்ள சில முக்கியமான காலநிலை தொடர்பான சவால்களை எதிர்கொள்ள உதவும்,” என்று இந்திய அரசாங்கத்தின் MoEFCC இன் பொருளாதார ஆலோசகர் திருமதி ராஜஸ்ரீ ரே தெரிவித்தார்.

“காலநிலை மாற்றத்தின் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு றுகுP உடனான இலங்கையின் கூட்டு முயற்சிகளில் இந்தத் இத் திட்டம் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது” என்று இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சின் மேலதிகச் செயலாளர் (சுற்றுச்சூழல் திட்டங்கள் மற்றும் கல்விப் பயிற்சி) டபிள்யு. ஜி. குமாரகம தெரிவித்தார். “இந்த சரியான நேரத்தில் இத்திட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும், கற்றுக் கொள்ளவும் உதவுகிறது, ஆபத்தில் இருக்கும் சமூகங்களுக்கு காலநிலை பின்னடைவை உருவாக்க உதவும் பொதுவான இலக்கை நோக்கி நாங்கள் செயல்படுகிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த அறிமுக விழாவுடன் ஒரு பிராந்திய ஆரம்ப நிகழ்வும் இடம்பெற்றது, இது இந்தியா மற்றும் இலங்கையின் பங்குதாரர்களுக்கு திட்ட நடைமுறைப்படுத்தலில் முன்னேற்றம் காண்பதற்கு ஒரு தளத்தை வழங்கியது. இந்த நிகழ்வின் போது இரு நாடுகளின் அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஒன்றிணைந்து முன்னோக்கி செல்லும் வழி குறித்து விவாதித்தனர்.

“இந்த முன்முயற்சி குறிப்பிடத்தக்க காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய விவசாய குடும்பங்களின் தழுவல் திறனை மேம்படுத்தும், மேம்பட்ட நடைமுறைகள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட, காலநிலை – எதிர்ப்பு வாழ்வாதாரங்கள் மற்றும் பங்கேற்பு அணுகுமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் உள்@ர் தழுவல் உத்திகளை செயல்படுத்தவும் இது உதவுகிறது” என்று WFP இன் இந்திய வதிவிடப் பணிப்பாளர் எலிசபெத் ஃபௌர் தெரிவித்தார்.

“காலநிலை மாற்றத்தின் வேகமாக தீவிரமடைந்து வரும் விளைவுகளினைச் சார்ந்ததாக எமது உணவு முறைகள் உள்ளன” என WFP  இன் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஜெரார்ட் ரெபெல்லோ தெரிவித்தார்.

“சுற்றுச்சூழல் அமைச்சுடன் இணைவதன் மூலம், நாங்கள் மீண்டெழும் திறனை அதிகரிப்பதையும், இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சமூகங்கள் ஒழுங்கற்ற வானிலை முறைமைகளுக்கு நன்கு ஆயத்தமாவதற்கு உதவுவதனையும் நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உணவுப் பயணம் தடையின்றி இருப்பதை உறுதி செய்யும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் இந்தியாவின் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஷோம்பி ஷார்ப், சுற்றுச்சூழல், வனாந்திரங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சின் பிரதிச் செயலாளர் ருச்சிகா டிரால், WFP  ஒத்துழைப்புக்கான பங்காளித்துவ செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம். ரிஃப்லான், மற்றும் இந்தியாவில் உள்ள உலக உணவுத் திட்டத்தின் பிரதி வதிவிடப் பணிப்பாளர் நோசோமி ஹாஷிமோடோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான அமைப்பாகும், இது அவசர காலங்களில் உயிர்களைக் காப்பாற்றுகிறது மற்றும் மோதல்கள், பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வரும் மக்களுக்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான பாதையை உருவாக்க உணவு உதவியைப் பயன்படுத்துகிறது.