‘நீங்கள் எனது மன்னரில்லை”- அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சார்ல்ஸின் நிகழ்வில் கோசமெழுப்பிய பெண் செனெட்டர்

17 0

அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்ல்சினை பார்த்து நீங்கள் எனது மன்னரில்லை என அவுஸ்திரேலிய செனெட்டர் ஒருவர் கோசமிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய விஜயத்தி;ன் இரண்டாவது நாளான இன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சார்ல்ஸ் உரையாற்றிய பின்னர் சுயேட்சை கட்சியின் செனெட்டர் ஒருவர் நீங்கள் எனது மன்னரில்லை என கோசம்எழுப்பியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளான அபோர்ஜினிகளை பிரதிநிதித்துவம் செய்யும் லிடியா தோர்ப்பே இவ்வாறு சத்தமிட்டு;ள்ளார். அவரை பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளை பிரிட்டன் இனப்படுகொலைக்கு உட்படுத்தியது என சத்தமிட்ட செனெட்டர் இது உங்களது நிலமில்லை நீங்கள் எங்கள் மன்னரும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் பிபிசிக்கு கருத்து தெரிவித்துள்ள செனெட்டர் மன்னர் சார்ல்சிற்கு தெளிவான செய்தியை தான் தெரிவிக்க விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

இறையாண்மையிருக்கவேண்டும் என்றால் நீங்கள் இந்த நிலத்தவராகயிருக்கவேண்டும் மன்னர் இந்த நாட்டவர் இல்லை,அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளுடன் சமாதான உடன்படிக்கை குறித்து காலணித்துவ ஆட்சியாளர்களிற்கு தலைவணங்க நாங்கள் தயாரில்லை,சார்ல்ஸின் மூதாதையர்களே இனப்படுகொலையில் ஈடுபட்டனர்,பாரிய படுகொலைகளில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடான அவுஸ்திரேலியாவின் அரசதலைவராக சார்ல்ஸ் விளங்குகின்றார்,எனினும் குடியரசு குறித்த விவாதங்கள் அவுஸ்திரேலியாவில் தீவிரமடைந்துள்ளன.