கடந்த காலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் சுமார் 50 துப்பாக்கிகளே கையளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் பொதுமக்களுக்கு 1,650 துப்பாக்கிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் வெலிசறையில் உள்ள அரசாங்கத்தின் வர்த்தக வெடிபொருள் களஞ்சியசாலையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
உரிய திகதிக்கு முன்னர் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை ஒப்படைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.