ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளது.
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழங்க விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, காவல்துறையினர் தமது விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக அறிவித்தனர்.
இதனை அடுத்து விசாரணை தகவல்களை சட்டமா அதிபருக்கு அனுப்பவுள்ளதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்தனர்.
நீதிமன்றமும் இதற்கு அனுமதி அளித்தது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசார வேளையின் போது, பொது எதிர்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட மைத்தரிபால சிறிசேன மற்றும் அப்போதைய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதாக கூறப்பட்டு, போலியான கையொப்பம் ஒன்றை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டையே திஸ்ஸ அத்தநாயக்க எதிர்கொண்டுள்ளார்.