வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு!

16 0

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலும் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) வவுனியாவில் நடைபெற்றது.

கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது கட்சியின் ஸ்தாபகர் உமாமகேஸ்வரனின் திருவுருவப்படத்துக்கு விளக்கேற்றலோடு ஆரம்பமானது.

இதன்போது வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், வேட்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், வேட்பாளர் வைரமுத்து திருச்செல்வம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.