மழைக்காலங்களில் கீரை வகைகளை உட்கொள்வதை தவிர்க்கவும் – ஊட்டச்சத்து நிபுணர்கள்

34 0

வெள்ளம் படிப்படியாகக் குறைவடைந்தாலும் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள நிலத்தில் விளையக்கூடிய கீரை வகைகளை உண்பதை தவிர்க்குமாறு  ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஊட்டச்சத்து நிபுணர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“கடும் மழை காரணமாக கழிவறைகள்  போன்றவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர்  தண்ணீரில் கலந்து நிலத்தில் தேங்குவதால் நிலத்தில் விளையும் கீரை வகைகளை உண்பது மிகவும் ஆபத்தானது ஆகும்.

இதனால், மழை வெள்ளம் குறையும் வரை அகத்தி, முருங்கை போன்ற கீரை வகைகளை மாத்திரம் உண்பது சிறந்ததாகும்.

மேலும், கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக வயிற்றுப்போக்கு , வயிற்றுக்கடுப்பு போன்ற நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், இயன்றவரை கொதித்து ஆறிய நீரை பருக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.