இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் சேவிங் ஹியூமனிட்டி பவுண்டேஷன் இணைந்து திருகோணமலை பிரதேச சர்வ சமயக் குழுவின் மாதாந்த செயலமர்வு புதன்கிழமை (16) திருகோணமலை மாவட்ட சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் சர்வ சமயப் பெரியவர்கள், கல்வியியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலானது மத ஒற்றுமையை வலுவூட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டது.